சசிகலா A2 குற்றவாளி என்றால் A1 குற்றவாளி யார்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சசிகலா இன்று பெங்களூருவிலிருந்து தமிழகம் வருகிறார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதே சமயம் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நடைபெற்ற அரசியல் பிரச்சாரத்தில்,
“பெங்களூருவிலிருந்து இன்று ஒருவர் தமிழகம் வருகிறார். இனி நடக்கப்போவதை மட்டும் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “ஊரை கொள்ளையடித்த சசிகலா வருகிறார் என அமைச்சர்கள் ஒரு பேட்டியில் கூறினார்கள் யார் ஆட்சியில் அவர் கொள்ளை அடித்தார்? எதற்கு சிறை சென்றார்? A2 குற்றவாளி தான் சசிகலா, அப்போ A1 குற்றவாளி யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.