ஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பால் செவிலியர் கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
ஆண்டிப்பட்டி அருகே செவிலியர் கொலையான சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு வந்துசென்ற ஆண் செவிலியர் தான் கொலையாளி என்று போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவன் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு தனியாக வசித்து வந்த செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரது செல்போனில் நண்பர்களான 150-க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை நடத்தப் பட்ட நிலையில் விசாரணைக்கு வந்து சென்ற ஆண் செவிலியர் ஒருவர் தான் கொலை செய்த கொலையாளி என்று கண்டுபிடித்து உள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்த 48 வயதான செல்வி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு பாப்பம்மாள்புரத்தில் தனியாக வசித்து வந்த செல்வி கடந்த நவம்பர் மாதம் 24-ம் தேதி வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டது கிடந்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் செல்வியின் வீட்டிற்கு சென்று ஆதாரங்களை சேகரித்தபோது அங்கே கொலை செய்யப்படுவதற்கு முன்பு யாருடனோ தவறான செயல்களில் ஈடுபட்டதாக தடயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
செல்வியின் செல்போனை ஆய்வு செய்ததில் செல்விக்கு பல்வேறு நபர்களுடன் தகாத தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து செல்வியுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் மொபைல் நம்பரில் 150-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
அந்த வகையில் கடந்த 9-ம் தேதி கோடாங்கி பட்டியைச் சேர்ந்த கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியராக ராமச்சந்திர பிரபு என்பவரை அழைத்து விசாரணை நடத்தினர்.
அதற்கு அடுத்த நாள் 10-ம் தேதி ஊத்துக்காடு பகுதியில் ராமச்சந்திர பிரபு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் காவல் துறையினருக்கு ராமச்சந்திரன் பிரபு மீது சந்தேகம் எழுந்தது தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமச்சந்திர பிரபு தான் குற்றவாளி என தெறியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் கடந்த மாதம் 24-ம் தேதி நடைபெற்றுள்ளது.
கொலை நடந்த அன்று 4 மணி அளவில் நர்ஸ் செல்வியின் 3 பவுன் தங்கச் சங்கிலி பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ராமச்சந்திர பிரபு அடகு வைத்தற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
நர்ஸ் செல்வி கொலை செய்தது இராமச்சந்திர பிரபுதான் என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்த காவல்துறையினர் ராமச்சந்திர பிரபு மனைவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,
தனது கணவருக்கு செல்வியுடன் தகாத உறவு இருந்ததை ஒப்புக் கொண்டதோடு கணவரிடம் செல்வி பல லட்சம் ரூபாய் கடனாக பெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.