துடிக்க துடிக்க மருமகனை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமியார் - அதிர்ச்சி சம்பவம்

crime-samugam
By Nandhini Nov 01, 2021 06:24 AM GMT
Report

துடிக்க துடிக்க மருமகனை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மாமியார் வீட்டில் மருமகன் புடவையில் தூக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, மகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மாமியாரே மருமகனை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையில் இருந்த கள்ள உறவினால் இந்த கொலை நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கடந்த 29ம் தேதி அன்று வேப்பூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். அன்று இரவு 11. 45 மணிக்கு வேப்பூர் அரசு மருத்துவமனையில் வேல்முருகன் சடலம் இருப்பதாக அவரது தாய் மலர்கொடிக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து, கதறி அழுது மருத்துவமனைக்கு வந்த வேல்முருகனின் தாய் மலர்கொடி, மகன் எப்படி இறந்தான் என்று கேட்டுள்ளார். அவர் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அங்கிருந்தவர்கள் சொன்னவுடன் தாயாருக்கு சந்தேகம் வந்தது. இதனையடுத்து, வேப்பூர் போலீசில் தன் மகனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவர் புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் வேல்முருகன் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

அதன் பின்னர் மாமியார் குமுதாவை அழைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, வேல்முருகனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதை ஒப்புக்கொண்டிருக்கிறார். பிறகு போலீசார் குமுதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.   

துடிக்க துடிக்க மருமகனை கழுத்தை நெரித்து கொலை செய்த மாமியார் - அதிர்ச்சி சம்பவம் | Crime Samugam