கள்ள தொடர்பால் உயிரைவிட்ட மகன் - நெஞ்சை உலுக்கும் தந்தையின் ஒப்பாரி
மகன் இறந்துவிட்டதை கேள்விப்பட்ட தந்தை சாலை முழுவதும் கதறி அழுதபடி சென்ற சம்பவம் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அன்னான்டப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தசராஜி.
இவரது மகன் வேங்கையன் என்கிற பிரேம்குமார் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.பிரேம்குமாருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோமளா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது.
இந்நிலையில் பிரேம் குமாருக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பிரேம்குமாருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் எலக்ட்ரீசியன் வேலை செய்துவந்த கடையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவர்.
தகவலறிந்து அக்கம் பக்கத்தினர் உடனே திருப்பத்தூர் கிராமிய காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற கிராமிய காவல் உதவி ஆய்வாளர் பிரேம் குமாரின் உடலில் லேசான உயிர் இருப்பதை அறிந்து 108 ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் காவல் வாகனத்திலேயே அவரை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் பிரேம்குமார் வருகின்ற வழியிலேயே இறந்துவிட்டதாக கூறிய நிலையில் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து திருப்புத்தூர் கிராமிய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தன் மகன் இறந்துவிட்ட தகவலை கேள்விப்பட்ட பிரேம் குமாரின் தந்தை தசராஜி நீண்ட தூரம் சாலையில் கத்தி கதறி ஒப்பாரி வைத்தபடியே அரசு மருத்துவமனையை நோக்கி வந்த சம்பவம் பார்ப்போர் அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது.