கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல மல்யுத்த வீரர் சுஷில்குமார் சஸ்பெண்ட்! இந்தியன் ரயில்வே அதிரடி

crime-india-sports-
By Nandhini May 25, 2021 10:33 AM GMT
Report

இளம் மல்யுத்த வீரர் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பணியிலிருந்து இந்தியன் ரயில்வே சஸ்பெண்ட் செய்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான சாகர் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, டெல்லி சத்திராசல் விளையாட்டு அரங்கில், சுஷில் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாகரை கடுமையாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சாகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

சுஷில் குமாருக்கும் அவரது நண்பர்களுக்கும் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, சுஷில் குமாரும், அவரது நண்பர்களும் சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தனர்.

சுஷில்குமார் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர்.

இதனையடுத்து, டெல்லி தனிப்படை போலீசார் சுஷில் குமாரை கைது செய்துள்ளனர். இவர், ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், சுஷில் குமார் வடக்கு ரயில்வேயில் மேலாளராக பணியாற்றி வந்தார். தற்போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நிலையில், அவரை ரயில்வே மேலாளர் வேலையிலிருந்து இந்தியன் ரயில்வே சஸ்பெண்ட் செய்துள்ளது. 

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல மல்யுத்த வீரர் சுஷில்குமார் சஸ்பெண்ட்! இந்தியன் ரயில்வே அதிரடி | Crime India Sports