பெற்ற பிள்ளைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய், தந்தை கைது! அதிர்ச்சி சம்பவம்
ஈரோடு அருகே பெற்ற பிள்ளைகளை நரபலி கொடுக்க முயன்ற தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், முதல் மனைவிக்கும், 2-வது மனைவிக்கும் தலா 2 குழந்தைகள் உள்ளனர். மூத்த மனைவி ரஞ்சிதாவுக்கு தீபக், கிஷாந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இரண்டாவது மனைவியின் தோழியான தனலட்சுமி என்பவரும், மூத்த மனைவி ரஞ்சிதாவும், சிவனும் சக்தியும் போல இருப்பதாக கூறி இரண்டு பிள்ளைகள் கண் முன்பே, கணவர் ராமலிங்கம் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
மேலும், ராமலிங்கம், ரஞ்சிதா, தோழி தனலட்சுமி மூவரும் சேர்ந்து 2 மகன்களையும் கொடுமைப்படுத்தியுள்ளனர். மூட நம்பிக்கை காரணமாக சிறுவர்களை நரப்பலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இவர்களின் திட்டத்தை அறிந்து கொண்ட சிறுவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி எஸ்.பி அலுவலகத்தில் சிறுவர்கள் புகார் கொடுத்தனர்.
இவர்கள் கொடுத்த புகாரை பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராமலிங்கம், அவரது 2 மனைவிகள், தோழி தனலட்சுமி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மகிந்த - மைத்திரி காலத்தில் ஏற்பட்ட கோடிக்கணக்கான இழப்பு : தணிக்கை அறிக்கையில் வெளியான தகவல் IBC Tamil
இனப்படுகொலையாளி மகிந்தவின் மேடையில் அர்ச்சுனா! நாமலுக்கு ஒத்துழைப்பு என்ற கருத்தோடு வழங்கிய விளக்கம் IBC Tamil