சிவனின் மறு உருவம்: மனைவியை தோழிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்! அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்
ஈரோட்டில் தன்னுடைய மனைவிக்கு கணவனே இரண்டாவது திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம், ஜவுளித்தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி ரஞ்சிதாவுக்கு இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவி இந்துமதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இரண்டு மனைவிகளுடன் ரயில் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார் ராமலிங்கம், அங்கு இந்துமதியை தேடி அடிக்கடி அவரது தோழியான சசி என்பவர் வந்துள்ளார்.
இதில், ரஞ்சிதாவுக்கும்- சசிக்கும் இடையே நட்பு உருவானது, இதைப்பார்த்த ராமலிங்கம், ரஞ்சிதாவை சக்தி என்றும், சசியை சிவன் என்றும் புகழ்ந்துள்ளார்.
ஒருகட்டத்தில் இருவருக்கும் திருமணமும் செய்து வைத்துள்ளார், தன்னுடைய குழந்தைகளுக்கு சசி தான் உண்மையான அப்பா என்றும், தன்னை மாமா என அழைக்கும்படியும் வற்புறுத்தியுள்ளார். அத்துடன் குழந்தைகளை மிக கொடூரமாக துன்புறுத்தியதுடன், கழிவறையில் படுக்க வைத்து, கிருமிநாசினியை குடிக்க வைத்துள்ளார்.
இதற்கிடையே குழந்தைகளை நரபலி கொடுக்க மூவரும் திட்டமிட்டுள்ளனர், இதையறிந்து கொண்ட குழந்தைகள் அங்கிருந்து தப்பி வந்து, தாத்தாவின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதற்கு முன்னதாக நடந்த சம்பவம் பற்றி கடிதமும் எழுதி வைத்திருந்தனர், தொடர்ந்து குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி ரஞ்சிதா மிரட்டல் விடுக்க, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் சென்றுள்ளது.
இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள ஈரோடு தாலுகா போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர், விசாரணையில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகலாம் என தெரிகிறது.