காய்ச்சலுக்கு மருத்துவமனை சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் - பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளிக்கு மூளையில் இரத்தம் உறைந்துள்ளதாக பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
வினோத் காம்ப்ளி
இந்திய கிரிக்கெட் அணிக்காக 9 ஆண்டுகள் ஆடிய வினோத் காம்ப்ளி(vinod kambli), டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டை சதங்கள் உட்பட 4 சதங்களை அடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் பால்ய கால நண்பரான இவர், பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் இருவரும் இணைந்து 664 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் சச்சின் டெண்டுல்கருடன் இவர் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவில் உடல் பலவீனமாக வினோத் காம்ப்ளி காணப்பட்டார்.
[PK2AWD[
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை திடீரென காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதால் வினோத் காம்ப்ளி, சிகிச்சைக்காக தானே மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூளையில் இரத்தம் உறைவு
அவரின் உடல்நிலை குறித்து பேசிய மருத்துவர் விவேக் திரிவேதி, "ஆரம்பத்தில், சிறுநீரக தொற்றும் தசை பிடிப்பும் இருப்பதாக மட்டும் அவர் தெரிவித்தார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் வினோத் காம்ப்ளியின் மூளையில் இரத்தம் உறைந்திருப்பதாக தெரியவந்தது"என்று தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையில் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச சிகிச்சை அளிக்க மருத்துவமனை பொறுப்பாளர் எஸ் சிங் முடிவு செய்துள்ளார்.
தற்போது வினோத் காம்பிளிக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். "நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் இந்த மருத்துவர்கள்தான்" என வினோத் காம்பிளி தற்போது மருத்துவமனையில் இருந்தே வீடியோ வெளியிட்டுள்ளார்.