தலைக்கேறிய போதையில் மனைவி தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி - மும்பை போலீஸ் நோட்டீஸ்..!

Cricket
By Nandhini 1 மாதம் முன்
Report

மனைவியை குடிபோதையில் தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ப்ளியை நேரில் ஆஜராகும்படி பாந்த்ரா போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் 2 இரட்டை சதத்துடன் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பேட்டிங் சராசரி 54.20 வைத்துள்ளார். இதுவரை 1,084 ரன்கள் அவர் எடுத்துள்ளார். 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2,477 ரன்கள் சேர்த்துள்ளார்.

மனைவி பரபரப்பு புகார்

இவர் தன் குடும்பத்துடன் மராட்டியத்தில் உள்ள பந்த்ரா மேற்கு பகுதியில் ஒரு பிளாட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், காம்ப்ளி மீது அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். அந்த புகாரில், காம்ப்ளி நன்றாக குடித்து விட்டு என்னை பார்த்து, தகாத வார்த்தைகளால் திட்டி என்னை தாக்கினார்.

மேலும், சமையலறைக்கு உள்ளே சென்று சமையல் செய்ய உபயோகப்படும் பாத்திரம் ஒன்றின் கைப்பிடியை எடுத்து வந்து என்னை மீது வீசினார்.

இந்த தாக்குதலில் என் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

cricketer-vinod-kambli-fir-registered-police

நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்

இதனையடுத்து, மும்பை பாந்த்ரா போலீசார் காம்ப்ளியின் வீட்டுக்கு இன்று நேரில் சென்றார்கள். 41ஏ பிரிவின் கீழ், அவரை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கும்படி கூறுவதற்கான நோட்டீசை வழங்க அவர்கள் சென்றனர். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.         

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.