2 சதங்கள் அடிப்பது குறித்து ஆரம்பத்தில் நான் நினைக்கவே இல்லை - சுப்மன் கில் ஓபன் டாக்..!
2 சதங்கள் அடிப்பது குறித்து ஆரம்பத்தில் நான் நினைக்கவே இல்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது.
நேற்று இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மைதானத்தில் இரு அணிகளுக்கு நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் இறுதியில் இந்திய அணி 12 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, இத்தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்
நேற்று நடைபெற்ற இப்போட்டியில், வெறும் 122 பந்துகளில் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மான் கில் 150 ரன்களை எடுத்து இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்தார்.
சுப்மன் கில் பேட்டி
இது குறித்து சுப்மன் கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு 2 சதங்கள் அடிப்பது குறித்து ஆரம்பத்தில் நினைக்கவே இல்லை, ஆனால் 47-வது ஓவரில் சிக்ஸர்கள் அடித்த போது என்னால் அந்த இலக்கை அடைய முடியும் என்ற எண்ணம் வந்தது.
இஷான் கிஷன் எனக்கு ஒரு சிறந்த பார்ட்னராக உள்ளார். அவர் இரட்டை சதம் விளாசிய போது நான் அங்கு இருந்தேன். அணிக்கு நான் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. நாங்கள் எதிர்பார்த்ததை விட எங்களது ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது என்றார்.