முதல் சர்வதேச போட்டி; கண்கலங்கிய தமிழக வீரர் - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி பதிவு!
முதல் சர்வதேச போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான சாய் கிஷோர் குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.
சாய் கிஷோர்
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இதுவரை இந்தியா 16 தங்கம், 26, வெள்ளி, 29 வெண்கல பதக்கங்களுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் கிரிக்கெட் காலிறுதி போட்டியில் நேபாள அணியை இந்திய அணி எதிர்கொண்டது. மேலும் அந்த போட்டியை 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. இந்த போட்டியில், நீண்டகாலமாக இந்திய அணியில் இடம்பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர் சாய் கிஷோர் முதன் முறையாக சர்வதேச போட்டியில், இந்திய அணிக்காக அறிமுகமானார்.
முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடிய அவர் 4 ஓவர்கள் பந்துவீசி 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கும்போது சாய் கிஷோர் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி
இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணி வீர தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "கடின உழைப்பை வெளிப்படுத்தும் மக்களுக்கான பலனை கொடுப்பதற்கான வழிகளை கடவுள் பார்த்துக்கொள்வார்.
டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த சாய் கிஷோர் ஒரு சூப்பர் ஸ்டார். அவரை பற்றி நினைக்கும் என்னால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாது. இன்று காலை எழுந்ததும், ஆடும் லெவனில் சாய் கிஷோரின் பெயரைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டேன். எப்போதும் என் பட்டியலில் சாய்க்கு முதலிடமே. தனது பேட்டிங்கை மேம்படுத்திய விதமே அவரைப் பற்றி அனைத்தையும் நமக்கு சொல்லும்.
திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சாய் இந்திய அணியில் இடம்பெற, எந்த வடிவத்திலும் விளையாடும் வகையில் தன்னை தானே மாற்றினார். இப்படி இன்னும் அவரைப் பற்றி என்னால் பேசிக்கொண்டே இருக்க முடியும். ஆனால் இப்போதைக்கு இது போதும். இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சாய் இடம்பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இனி அவருக்கான இடத்தை யாராலும் பறிக்க முடியாது" என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
The emotional Sai Kishore during India's national anthem.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 3, 2023
He bowled really well on his debut - 1/26 in the Quarter Finals of Asian Games. pic.twitter.com/sWD9Afx9TD