உலகக் கோப்பை கிரிக்கெட்; விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு உள்ளதா? - வெளியான தகவல்..!

Cricket Rishabh Pant
By Nandhini Jan 15, 2023 06:56 AM GMT
Report

இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்

கடந்த மாதம் டிசம்பர் 30ம் தேதி தன் தாயாரைப் பார்க்க ரூர்க்கிக்குச் சென்று கொண்டிருந்த போது, ரிஷப் ​​பண்ட் ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரிஷப்பிற்கு கால் முட்டியில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால் தசைநார் கிழிந்த இரு பகுதியை சரி செய்ய ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இன்னும் அடுத்த 6 வாரத்தில் இன்னொரு தசைநார் கிழிவுக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.

cricketer-rishabh-pant-car-accident

போட்டிகளை தழுவ விடும் ரிஷப் பண்ட் -

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி செய்தியாளர்களிடம் பேசுகையில், விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் கார் விபத்திலிருந்து மீண்டு வருவதால், டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஐபிஎல் 2023-ல் விளையாடமாட்டார். மேலும், ரிஷப் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றார்.

இந்நிலையில், கார் விபத்தால் ரிஷப், அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவதும் சந்தேகம் தான் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.