இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் அவர்களின் தந்தை கான்சந்த் சிங் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால், பிப்ரவரி 21ஆம் தேதி அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.
தந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், ரிங்கு சிங் சென்னையில் பயிற்சியை நிறுத்தி வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், கான்சந்த் சிங் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan