அஜித் அப்படிப்பட்டவரு.. அவரு பண்ண விஷயத்த மறக்க முடியாது - இந்திய வீரர் நடராஜன்!

Ajith Kumar Tamil Cinema Cricket Tamil Actors T.Natarajan
By Jiyath Jun 26, 2024 07:28 AM GMT
Report

நடிகர் அஜித் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியுள்ளார்.   

நடராஜன் 

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் சமீபத்தில் தனது 33-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித் பங்கேற்றிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வரலாகியிருந்தது.

அஜித் அப்படிப்பட்டவரு.. அவரு பண்ண விஷயத்த மறக்க முடியாது - இந்திய வீரர் நடராஜன்! | Cricketer Natarajan Talks About Actor Ajith

இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடராஜன் "அந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் ஸ்பெஷல். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிசியோதெரபியான ஷாம் சுந்தர் மற்றும் தனசேகரன் ஆகியோர்தான்,

அஜித்துக்கு பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். நான் எதிர்பார்க்கவில்லை. அன்று அணியுடன் இரவு உணவு சாப்பிடத்தான் சென்றேன். திடீரென இருவரும் அஜித்தை மீட் பண்ண வைத்தார்கள்.

இந்தியன் படத்தில் நடிக்க மறுப்பு; கமல்ஹாசன் கேட்ட அந்த விஷயம் - என்ன செய்தார் ஷங்கர் ?

இந்தியன் படத்தில் நடிக்க மறுப்பு; கமல்ஹாசன் கேட்ட அந்த விஷயம் - என்ன செய்தார் ஷங்கர் ?

மறக்க முடியாது

கேக் வெட்டிக் கொண்டாடினோம். நான் வீடியோ காலில்தான் அஜித்துடன் பேசியிருக்கிறேன். நிறைய நல்ல விஷயங்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் நீண்ட நாள்களாக நேரில் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்தேன்.

அஜித் அப்படிப்பட்டவரு.. அவரு பண்ண விஷயத்த மறக்க முடியாது - இந்திய வீரர் நடராஜன்! | Cricketer Natarajan Talks About Actor Ajith

அஜித் மிகவும் எளிமையானவர். சொன்னால் நம்ப மாட்டீர்கள். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது, அஜித் எல்லாருடைய கார் கதவையும் திறந்து விட்டு வழியனுப்பி வைத்தார். அவரை சந்தித்தது வேறு மாதிரியான உணர்வாக இருந்தது. அந்த நாளை என்னால் மறக்க முடியாது" என நடராஜன் தெரிவித்துள்ளார்.