பாகிஸ்தான் தொகுப்பாளினி மீது மோதி கீழே விழ வைத்த கிரிக்கெட் வீரர்... - வைரலாகும் வீடியோ...!

Cricket Viral Video Pakistan
By Nandhini Jan 20, 2023 09:47 AM GMT
Report

பாகிஸ்தான் தொகுப்பாளினி மீது மோதி கீழே விழ வைத்த கிரிக்கெட் வீரரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

பாக். தொகுப்பாளினி விழ வைத்த கிரிக்கெட் வீரர்

இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரை போன்றே தென்னாப்பிரிக்காவில் சிஎஸ்ஏ 20 ஓவர் சேலஞ்ச் என்ற பெயரில் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. ஐபிஎல்-ல் முதலீடு செய்திருப்பவர்களே, இந்த தொடரிலும் அணிகளை வாங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கடந்த ஜனவரி 18ம் தேதியன்று நடந்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் எம்ஐ கேப் டவுன் ஆகிய அணிகள் மோதிக் கொண்டன.

இந்தப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் இன்னிங்சில் மார்கோ யான்சென் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் 13-வது ஓவரில் ஒரு பந்தை ஓங்கி அடித்தார். அந்தப் பந்து வேகமாக பவுண்டரியை நோக்கி சென்றது.

அப்போது, அந்த பந்தை தடுப்பதற்காக இரு புறத்திலிருந்து வீரர்கள் ஓடி வந்தனர். டைவ் அடித்து அந்தப் பந்தை பிடிக்க முயற்சி செய்தபோது, அங்கு பேட்டி எடுத்துக் கொண்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த தொகுப்பாளினி ஜைனப் அப்பாஸ் மீது, டைவ் அடித்து வந்த வீரர் நேராக அவர் கால்களிலேயே மோதினார். இதில் அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். ஆனால், அவர் சமாளித்துக் கொண்டு எழுந்து நின்றார்.

இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் என்னம்மா... ஓரமாய் போய் நிற்க வேண்டியது தானே என்று கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

cricketer-knocks-down-pakistani-hostess