‘இந்த மாதிரி ஆட்களை ஏன் சேர்த்தீர்கள்...’ - ஆஸ்திரேலிய தேர்வுக்குழு மீது கவாஸ்கர் பாய்ச்சல்...!

Sunil Gavaskar Cricket Australia Cricket Team
By Nandhini Mar 06, 2023 12:15 PM GMT
Report

உடல் தகுதி பெறாத ஆட்களை ஏன் அணியில் சேர்த்தீர்கள் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Ind Vs Aus 3 ஒருநாள் போட்டி -

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் சமீபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இந்தியா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனால், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்துள்ளது. இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

cricketer-gavaskar-on-australian-selectors

கவாஸ்கர் கண்டனம்

இந்நிலையில் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு மீது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

இப்போட்டியில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்களை குறித்து பலர் பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். சிலர் ஆடுகளம் குறித்து பேசுகிறார்கள். ஆனால் உண்மையிலே அவர்கள் தாக்க வேண்டியது ஆஸ்திரேலிய தேர்வு குழுவினர்களைத்தான்.

முழு உடல் தகுதி பெறாத ஸ்டார்க் மற்றும் கேமரான் கிரீனை தேர்வு குழுவினர் எப்படி தேர்வு செய்தார்கள். 2 டெஸ்ட் போட்டி என்பது பாதி தொடர் போய்விட்டது. 3 வீரர்கள் இல்லை என்றால் வெறும் 13 வீரர்களை வைத்து எப்படி ஒரு அணி தேர்வு செய்ய முடியும். அணியில் இருந்த வீரர் சரியில்லை என்றால், அவரை ஏன் அவர்களை தேர்வு செய்தார்கள்.

வெறும் 11, 12 வீரர்களை வைத்து ஆஸ்திரேலியா முதல் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளது. இதெல்லாம் ஏற்க முடியாது. இத்தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால், தேர்வு குழுவினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தன் கண்டனத்தை தெரிவித்தார்.

இத்தொடர் தொடங்குவதற்கு முன் சில வீரர்கள் காயம் காரணமாக விலகினார்கள். இத்தொடரிலிருந்து வார்னர், பேட் கம்மின்ஸ், ஏகார் போன்ற முக்கிய வீரர்கள் விலகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.