ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்த முன்னாள் CSK வீரர் - வரவேற்ற முதல்வர்!
முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அம்பத்தி ராயுடு
இந்திய அணியில் கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமானவர் 'அம்பத்தி ராயுடு'. இதுவரை 55 போட்டிகளில் விளையாடிய அவர் 47 சராசரி வைத்துள்ளார்.
தனது பேட்டிங் மூலம், சுழற்பந்து, வேகப்பந்து என அனைத்தையும் அம்பத்தி ராயுடு அதிரடியாக ஆடுவார். ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இறுதியாக விளையாடி சாம்பியனாக ஓய்வுபெற்றார். மேலும், கடந்த மே மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் அவர், தனது ஓய்வினை அறிவித்தார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்
இந்நிலையில் அம்பத்தி ராயுடு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார்.
இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தங்களது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், ``பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி திருப்பதி ராயுடு, முதல்வர் அலுவலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிகழ்வின்போது, துணை முதல்வர் நாராயண சுவாமி, எம்.பி பெத்திரெட்டி, மிதுன் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்" என்று தெரிவித்துள்ளனர்.