நான் அழகாக இருப்பதுதான் பிரச்சனையாக உள்ளது - கிரிக்கெட் வீரர் வேதனை
நான் அழகாக இருப்பதால் வீரர்கள் என்னை குறி வைத்தனர் கிரிக்கெட் வீரர் அஹமத் ஷாசாத் பேசியுள்ளார்.
அஹமத் ஷாசாத்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஹமத் ஷாசாத், கடந்த 2009 ஆம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.
2009 டி20 உலகக் கோப்பை மற்றும் 2017 ஆம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடிய இவருக்கு 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
குறி வைத்தனர்
இந்நிலையில் அணியில் வாய்ப்பு வழங்காதது குறித்து பேசிய அஹமத் ஷாசாத், நான் பார்ப்பதற்கு நன்றாக இருந்து, நன்றாக உடை அணிந்து, நன்றாக பேசியது சில வீரர்களுக்கு பிடிக்கவில்லை. இதற்காகவே பாகிஸ்தான் அணியில் என்னை குறி வைத்தனர். இதே பிரச்சனையை வேறு சிலரும் எதிர்கொண்டனர்.
உங்களுக்கு என ரசிகர் கூட்டம் இருந்தால் அதை சில மூத்த வீரர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் லாகூரின் அனார்கலி போன்ற சிறிய இடங்களில் இருந்து வந்தேன். என்னை பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் வகையில் நான் முன்னேற்றிக் கொண்டது எனக்கு நிறைய பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது " என கூறினார்.