Wow... இணையதளத்தில் வைரலாகும் கிரிக்கெட் அணியின் தலைவர்களின் மாஸ் செல்பி..!
16 நாடுகளின் கிரிக்கெட் அணியின் தலைவர்களின் மாஸான செல்பி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி இன்று முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
ஆஸ்திரேலியா பயணம்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. பெர்த் மைதானத்தில் தன்னுடைய இந்திய வீரர்களுக்கு பயிற்சி நிறைவடைந்துள்ளது.
இணையதளத்தில் வைரலாகும் செல்பி
இந்நிலையில், இணையதளத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளப்போகும் 16 நாடுகளின் கிரிக்கெட் அணி தலைவர்கள் ஒன்றாக இணைந்து செல்பி எடுத்து கொண்டுள்ளனர். தற்போது, இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Selfie time ??#T20WorldCup #AsliKhelToAbHoga#BabarAzam? #RohitSharma? #PakistanCricket #BCCI #Australia #Cricket #CricketWorldCup pic.twitter.com/0JqZLtDOAG
— Shabeer Ahmad (@Shabeer13192052) October 15, 2022
Selfie time of All #T20WorldCup2022 teams. pic.twitter.com/xSR6hbjbq2
— Cricket Critics (@Cricket4critics) October 15, 2022