தங்கள் அணியின் பெயரை கிரிக்கெட் உலகம் இன்று நினைவில் கொள்ளும் - நமிபியா அணிக்கு சச்சின் பாராட்டு

Nandhini
in கிரிக்கெட்Report this article
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி இன்று முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இரு அணிகளாக பிரிவு
இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 'ஏ' பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமிபியா, 'பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.
இலங்கையை வீழ்த்தி நமிபியா அபார வெற்றி
இந்நிலையில், டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-நமிபியா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இப்போட்டியின் இறுதியில், 19 ஓவர்கள் முடிவில் நமிபியா 55 ரன்கள் வித்தியாசத்தில் ஆசிய சாம்பியனான இலங்கையை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்று நமிபியா அணி கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் நமிபியா அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் நமிபியா அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இன்று நமீபியா அணி, தங்கள் அணியின் பெயரை கிரிக்கெட் உலகம் நினைவில் கொள்ளுமாறு கூறியுள்ளதாக" பதிவிட்டிருக்கிறார்.
Namibia ?? has told the cricketing world today… “Nam” yaad rakhna! ??
— Sachin Tendulkar (@sachin_rt) October 16, 2022