டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நமிபியா - இலங்கை அணி இன்று நேருக்கு நேர் மோதல்
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமிபியா - இலங்கை அணி நேருக்கு நேர் மோதுகின்றன.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி இன்று முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி
டி-20 உலக கோப்பையில் பங்கேற்க செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல். சூர்ய குமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. பெர்த் மைதானத்தில் தன்னுடைய இந்திய வீரர்களுக்கு பயிற்சி நிறைவடைந்துள்ளது.
இரு அணிகளாக பிரிவு
இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 'ஏ' பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமிபியா, 'பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும்.
நமிபியா - இலங்கை அணி நேருக்கு நேர் மோதல்
இந்நிலையில், டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-நமிபியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்திருக்கிறது.