டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - இதுவரை சாதனை படைத்த வீரர்கள் பற்றி ஒரு பார்வை...!
இதுவரை நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் சாதனை படைத்தவர்களைப் பற்றி பார்ப்போம்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி இன்று முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இரு அணிகளாக பிரிவு
இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 'ஏ' பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நமிபியா, 'பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.
இந்நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் சாதனை படைத்தவர்களைப் பற்றி பார்ப்போம் -
அதிக ரன்கள் குவித்தவர் -
மஹேலா ஜெயவர்த்தனே - இலங்கை - 1,016 ரன்கள் (31 ஆட்டம்)
அதிக சிக்சர் விளாசியவர் -
கிறிஸ் கெய்ல் - வெஸ்ட்இண்டீஸ் - 63 (33 ஆட்டம்)
அதிக விக்கெட் வீழ்த்தியவர் -
ஷகிப் அல்-ஹசன் - வங்காளதேசம் - 41 (31 ஆட்டம்)
சிறப்பான பந்து வீச்சு -
அஜந்தா மென்டிஸ் - இலங்கை 8 ரன் கொடுத்து 6 விக்கெட்டுகள் (ஜிம்பாப்வேக்கு எதிராக 2012)
அணியின் அதிகபட்சம் -
இலங்கை 260/6 - (கென்யாவுக்கு எதிராக 2007)
அணியின் குறைந்தபட்சம் -
நெதர்லாந்து 39 (இலங்கைக்கு எதிராக 2014)
அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர் -
தில்ஷன் - இலங்கை -35 ஆட்டம்
அதிக ஆட்டங்களில் கேப்டன் -
தோனி (இந்தியா)-33 ஆட்டம்
அதிக கேட்ச் செய்த பீல்டர் -
டிவில்லியர்ஸ் - தென்ஆப்பிரிக்கா - 23 கேட்ச் (30 ஆட்டம்)