மெஹிடிக்கு கையொப்பமிட்ட T.Shirtடை பரிசளித்த விராட் கோலி - வைரலாகும் புகைப்படம்
வங்களாதேச ஆல்ரவுண்டர் மெஹிடிக்கு கையொப்பமிட்ட T.Shirtடை விராட் கோலி பரிசளித்துள்ளார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி
வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வந்தது.
3-ம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்தது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கைவசம் 6 விக்கெட்டுகளுடன் இந்திய அணி இன்று களமிறங்கியது.
இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 47 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது.
ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியால், உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி முன்னிலையில் இடம் பிடித்துள்ளது.
T.Shirtடை பரிசளித்த விராட் கோலி
இந்நிலையில், விராட் கோலிக்கு ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் உள்ளனர். வங்கதேச அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் 34 வயதான மெஹிடிக்கு கையொப்பமிட்ட T.Shirtடை விராட் கோலி பரிசளித்துள்ளார்.
ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வங்காளதேச ஆல்ரவுண்டர் மெஹிடி, விராட் கோலியிடமிருந்து கையெழுத்திட்ட T.Shirtடை பெற்றுக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து விராட் கோலியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், மெஹிடி ஹசன் மிராஸ் கோஹ்லியை 'சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்' என்றும், விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு" என்று பாராட்டியுள்ளார்.
Facebook post by Mehidy about Virat Kohli. pic.twitter.com/fVg3CNfHWb
— Johns. (@CricCrazyJohns) December 25, 2022