இந்த சாதனையை செய்த முதல் இந்தியன் என்ற பெருமையைப் பெற்ற நடராஜன்.. என்ன சாதனை தெரியுமா?

cricket record nattu
By Jon Jan 16, 2021 09:14 AM GMT
Report

தமிழகத்தை சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியர்களில் முதல் இந்தியராக சாதனை ஒன்று சொந்தக்காரர் ஆகியுள்ளார். த

மிழகத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால், இந்திய அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்று, 3-வது ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார்.

முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீச, அடுத்து நடந்த டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதன்பின் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் காயம் அடைய பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

இதன்மூலம் ஒரே பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்லும் அறிமுகம் ஆன ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.