இனவெறி பேச்சு ரெளடித் தனத்தின் உச்சம்: கோலி கண்டனம்

cricket-srilamka-southafrica-engalad-india-austra
By Jon Jan 10, 2021 02:29 PM GMT
Report

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்களை சிலர் இனவெறியை தூண்டும் விதமாக பேசியதற்கு விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் .

இந்திய அணி பந்து வீசியபோது பவுண்டரி எல்லையில் இருந்த முகமது சிராஜ் மற்றும் பும்ராவை மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் சிலர் இனவெறியைத் தூண்டும் விதமாக பேசினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.இந்த செயலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் இந்திய அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்டது.

இந்த நிலையில் இந்தியா திரும்பியுள்ள விராட் கோலி இது குறித்து தனது ட்விட்டர்பதிவில்கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில் இனவெறி தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பவுண்டரி எல்லையில் இதுபோன்ற பலவித தாக்குதல்கள் நடக்கின்றன.

இது ரெளடித்தனத்தின் உச்சம். களத்தில் இதுபோன்று நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறதுஎன பதிவிட்டுள்ளார்.