உலகக்கோப்பை அணியில் கணவர் இல்லை - ஆனாலும் ஆட்டம் போட்ட கிரிக்கெட் வீரரின் மனைவி!
இந்த முறை யுஸ்வேந்திர சாஹல் டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் ராகுல் சாஹர் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை யுஏஇ மற்றும் ஓமனில் கடந்த வாரம் தொடங்கியது. தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று முடிந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது.
இந்திய அணி முதல் போட்டியில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ள இந்திய அணியை உற்சாகப்படுத்த, கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
இந்த முறை யுஸ்வேந்திர சாஹல் டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை. அதே நேரத்தில் ராகுல் சாஹர் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தனஸ்ரீ வர்மா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் டீம் இந்தியா ஜெர்சியை அணிந்து 'குமா கே கேம் தேகா' என்ற இந்திப் பாடலுக்கு நடனமாடி டீம் இந்தியாவை உற்சாகப்படுத்துகிறார். இதுவரை, இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். மேலும், வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர்.
இது சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பை அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ராகுல் சாஹருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரும் அவரது மனைவியும் முழு வீரியத்துடன் இந்திய அணியை உற்சாகப்படுத்துகின்றனர்.
அவர் தனது மனைவியின் வீடியோவுக்கு ஹார்ட் சிம்பள் கொடுத்து கமெண்ட் செய்துள்ளார். இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
துபாயில் இந்தப்போட்டி நடைபெறுகிறது. உலகக் கோப்பையில் அண்டை நாடான பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதில்லை. இந்த சாதனையை அப்படியே வைத்திருக்க விராட் கோலி விரும்புவார்.
முன்னதாக நடைபெற்ற இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Puzzle IQ Test: படத்தில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகள்-12 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
