ஷேன் வார்னே உயிரிழப்பு - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் நேற்று மாரடைப்பால் திடீரென்று உயிரழந்தார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரராக இருந்தாலும், இவருடைய சுழற் பந்து மந்திரம் அனைத்து உலக கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
கிரிக்கெட் உலகில் கொட்டிக்கட்டி பறந்த ஷேன் வார்னேவின் இழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ஷேன் வார்னே மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி இதோ-
Shocked to learn about the sudden demise of Australian spin legend #ShaneWarne. Can't avoid but say 'Gone too soon'. I convey my deepest condolences to his family, fans and cricket fraternity who mourn the loss of a true genius. pic.twitter.com/SaFr8ZwSSH
— M.K.Stalin (@mkstalin) March 4, 2022