இனி கிரிக்கெட் ஆடமாட்டார்; பாஜகவில் முகமது ஷமி? ரசிகர்கள் ஷாக்!
முகமது ஷமி நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடப்போவதாக தகவல் பரவி வருகிறது.
முகமது ஷமி
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய நபராக அறியப்பட்டவர் முகமது ஷமி. அதிக விக்கெட்கள் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டி வரை செல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

அதன்பின், காலில் அவருக்கு காயம் மற்றும் வலி இருந்த நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போது லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்.
பாஜக முயற்சி
இதற்கிடையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முகமது ஷமியை மேற்கு வங்க தேர்தலில் நிறுத்த பாஜக மேலிடம் முயற்சித்து வருகிறது. ஆனால், ஷமி 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்று, 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறார்.

அவர் இன்னும் ஓரிரு ஆண்டுகளே கிரிக்கெட் ஆட முடியும் எனக் கூறப்படுகிறது.
ஷமிக்கு கடந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    