காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேல்..! - வைரலாகும் திருமண வீடியோ...!
நீண்ட நாட்களாக காதலித்து வந்த காதலியை இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் பட்டேல் திருமணம் செய்து கொண்டார்.
காதலியை திருமணம் செய்தார் அக்சர் பட்டேல்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வலம் வருபவர் அக்சர் பட்டேல். இவருக்கு குஜராத் மாநிலம், வதோதராவில் திருமணம் நடைபெற்றது.
அக்சர் படேல் நீண்ட நாட்களாக தனது தோழியை காதலித்து வந்தார். இதனையடுத்து, இரு வீட்டார் சம்பந்தத்துடன் கடந்த ஆண்டு தனது 29-வது பிறந்தநாளில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் அக்சர் பட்டேலுக்கும், மேகாவிற்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
While paps were busy spotlighting KL Rahul-Athiya Shetty wedding event
— hellogenee (@hellogenee) January 27, 2023
Indian cricket star Axar Patel and Meha Patel took the vows for lifetime...?
HelloGenee wishes them a married life, happily ever after ? #patel #AxarPatelWedding #MehaPatel #weddingcouple pic.twitter.com/2wW5Ujf0Or
Best moment in life☺#MehaandAxar #AxarPatel #MehaPatel #AxarPatelWedding pic.twitter.com/C68pOaBvQY
— Meha Patel (@Meha2026) January 27, 2023