நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனுக்கு ஓய்வு!

இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று தொடங்க இருக்கும் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக டாம் லேதம் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று இரண்டாவது போட்டி தொடங்குகிறது.

இந்நிலையில் இன்றையப் போட்டியில் கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக டாம் லேதம் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுதாம்ப்டன் நகரில் நடைபெற இருக்கிறது.

முக்கியமான அந்தப் போட்டிக்கு முன்பாக தேவையான ஓய்வு அளிக்கும்விதமாக வில்லியம்சனை நியூசிலாந்து இந்தப் போட்டியில் களமிறக்கவில்லை என கூறப்படுகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்