ரசிகர்களை அலறவிட்ட தல தோனியின் புதிய லுக் - இணையத்தில் வைரல் !
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் புதிய படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மகேந்திர சிங் தோனி
ஐபிஎல் 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில், தோனி அன் கேப்டு பிளேயராக விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
எனினும் இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக வில்லை. இந்த சுழலில் 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
தோனி, கடைசியாக இந்திய அணிக்காக 2019 ஜூலையில் விளையாடி இருந்தார். அதன் பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவர் சர்வதேச போட்டியில் விளையாடி (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.தற்போது அவர் பிசிசிஐ ஒப்பந்தத்தில் கூட இல்லை.
புதிய படம்
இந்த நிலையில் தான் விதிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவ்வப்போது தனது சிகை அலங்காரத்தை மாற்றி, மிகவும் 'ட்ரெண்டிங்'ஆக இருக்கும் தோனியின் தற்போதைய லுக் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
கடந்த வருடம் ஐபிஎல் தொடரின்போது, நீண்ட முடியுடன் வலம் வந்த தோனியின் புதிய லுக் வெளியாகியுள்ளது. 43 வயதாகும் தோனி, அந்த லுக்கில் மிகவும் யூத்தாக இருந்தது குறிப்பிடத்தக்கது.