மைதானத்தில் தோழிக்கு Love Propose செய்த ஹாங்காங் வீரர் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

Cricket Viral Video Hong Kong
By Nandhini Sep 01, 2022 05:27 PM GMT
Report

நேற்று போட்டியை முடித்து விட்டு மைதானத்தில் இருந்த தன் தோழிக்கு ஹாங்காங் வீரர் Love Propose செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20

துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இரு பிரிவுகளாக 6 அணிகள்

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 7 முறை சாம்பியனான இந்தியாவுடன், பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருக்கின்றன. அதேவேளையில் 5 முறை பட்டமும் வென்ற இலங்கையுடன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

முதலாவது போட்டி

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு ஹாங்காங் - இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

love-propose-viral-video-kinchit-shah

வைரலாகும் வீடியோ

நேற்று இந்தப் போட்டி முடிந்த பிறகு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாங்காங் வீரர் கிஞ்சித் ஷா தனது பெண் தோழியிடம் சென்று, மைதானத்தில் முழங்காலிட்டு, தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த பெண் தோழி, கிஞ்சித் ஷாவின் காதலை ஏற்றுக்கொண்டார்.  இதன் பிறகு, ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தினர். 

இதை மைதானத்தில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.