"நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா" - தன் மகனையே அவுட் செய்த ப்ரட்லீ வைரலாகும் வீடியோ

cricket viral out brettlee bowled
By Irumporai Jan 02, 2022 11:59 AM GMT
Report

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களில் ஒருவர் ப்ரட்லீ. சச்சின் டெண்டுல்கர், லாரா உள்ளிட்ட லெஜண்ட் பேட்ஸ்மேன்களுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியவர். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் வர்ணணையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், ப்ரட் லீயின் சகோதரரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டருமான ஷான் லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ப்ரட்லீயும் அவரது மகனும் அவர்களது வீட்டின் முன்பு கிரிக்கெட் விளையாடுகின்றனர்.

அபோது ப்ரட்லியின்  15 வயதே ஆன மகன் ப்ரஸ்டன் பேட்டிங் செய்கிறார். அவருக்கு பந்துவீசும் ப்ரட்லீ தனது துல்லியமான யார்க்கரால் தனது மகனின் மிடில் ஸ்டம்பை பறக்க விடுகிறார். மகனை ஆட்டமிழக்கச் செய்த மகிழ்ச்சியில் ப்ரட்லீ தனது கையை உயர்த்தி மகிழ்ச்சியில் முன்னோக்கி வருகிறார்.

அவது மகன் ப்ரஸ்டனும் சிரித்துக்கொண்டே பேட்டை கீழே போட்டு விட்டு வருகிறார். தற்போது இணையதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.