சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருது - ஜோஸ் பட்லர், சித்ரா அமீன் தேர்வு - ஐசிசி அறிவிப்பு..!

Jos Buttler
By Nandhini Dec 13, 2022 10:52 AM GMT
Report

நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கணையை ஐசிசி பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருது - 

ஒவ்வொரு மாதமும் ஐசிசி சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது.

இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கணையை ஐசிசி பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி நவம்பர் மாத சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன் கேப்டன் ஜோஸ் பட்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் மாத சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தானின் சித்ரா அமீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை ஜோஸ் பட்லர் வென்று கொடுத்தார்.

சமீபத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அயர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய சித்ரா அமீன் முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     

cricket-jos-butler-chitra-amin