இந்த தோல்விக்கு நான் தான் காரணம் : வேதனையுடன் விளக்கம் கொடுத்த ரிஷப் பண்ட்

csk ipl2021 rishabhpant dcvscsk
By Irumporai Oct 10, 2021 10:44 PM GMT
Report

போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை டாம் கர்ரானிடம் கொடுத்தற்கான காரணத்தை ரிஷப் பண்ட்டே வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான முதல் குவாலிபயர் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 60 ரன்களும், ஹெய்ட்மர் 37 ரன்களும், இறுதி வரை போராடிய ரிஷப் பண்ட் 51 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கீங்ஸ் அணி,டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த நிலையில் டெல்லி அணியின் இந்த தோல்விக்கு, கேப்டன் ரிஷப் பண்ட், டாம் கர்ரானிடம் கொடுத்தது தான் காரணம் என பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சியை விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், டாம் கர்ரானுக்கு கடைசி ஓவர் கொடுத்ததற்கான காரணத்தை ரிஷப் பண்ட்டே போட்டி முடிந்தபின் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். தோல்வி குறித்து ரிஷப் பண்ட் பேசுகையில்,

'இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எனது வேதனையை வெறும் வார்த்தைகளால் கூட விவரிக்க முடியாது. தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் விளையாடுவது மட்டுமே தற்போது எங்கள் கையில் உள்ளது.

டாம் கர்ரான் முதல் மூன்று ஓவர்களை சிறப்பாக வீசி அதில் குறைவான ரன்கள் கொடுத்ததால் தான் கடைசி ஓவரையும் அவருக்கே கொடுக்க நினைத்தேன். ஆனால் கடைசி ஓவரில் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை,

ஈசியாக ரன்கள் கொடுத்துவிட்டோம். 173 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான ரன் தான், இருந்தபோதிலும் சென்னை வீரர்கள் பவர்ப்ளேவில் மிக சிறப்பாக விளையாடிவிட்டன. அடுத்த போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தார்

You May Like This