41 மாத கோலியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாபர் அஸாம்

virat kohli babar azam icc ranking
By Praveen Apr 14, 2021 10:29 AM GMT
Report

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பாகிஸ்தான் தொடக்க வீரர் பாபர் அஸாம்.

பாகிஸ்தான் அணிக்காக 31 டெஸ்ட், 80 ஒருநாள், 49 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 26 வயது பாபர் அஸாம். கடந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 103, 31, 94 ரன்கள் எடுத்து அசத்தினார் பாபர் அஸாம்.

இதன் மூலம் கடந்த 41 மாதங்களாக ஒரு நாள் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை ஆக்கிரமித்து வந்த கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் முதலிடத்தில் இருந்த கோலி தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ஒரு நாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் 4வது பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம் என்பது குறிப்பிடத்தக்கது.      

41 மாத கோலியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாபர் அஸாம் | Cricket Ipl Rcb Pakistan