சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்சர்கள்... சாதனைப் படைத்த ரோகித் ஷர்மா - குவியும் வாழ்த்துக்கள்...!

Rohit Sharma Cricket Indian Cricket Team
By Nandhini Dec 08, 2022 12:20 PM GMT
Report

சர்வதேச கிரிக்கெட்டில் 500க்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்து ரோகித் ஷர்மா சாதனை படைத்துள்ளார்.

ரோஹித் ஷர்மா காயம்

நேற்று 2வது ஒரு நாள் போட்டியில் வங்காளதேசமும், இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதலில் வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து விளையாடியது.

இப்போட்டியின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில், முகமது சிராஜ் வீசிய 2வது ஓவரை அனமுல் ஹக் எதிர்கொண்டார். அப்போது பந்து அவருடைய பேட்டில் பட்டு எட்ஜ்ஜானது.

அது இரண்டாவது ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த ரோஹித் சர்மாவை நோக்கிச் சென்றது. அதனை கேட்ச் எடுக்க ரோஹித் முயற்சி செய்த போது, பந்து அவரது கையில் பட்டு நழுவியது. இதனால் ரோஹித் பலத்த காயம் ஏற்பட்டு கைகளை உதறியபடி அங்கிருந்து வெளியேறினார்.

களத்தில் போராடிய ரோஹித் சர்மா

இதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய இந்திய இலக்கை நோக்கி விளையாடியது. இப்போட்டியில் ஆரம்பத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக ரன் சேர்த்த போதும் கடைசி கட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டது. காயம் காரணமாக ரோஹித் ஷர்மா, கடைசியில் பேட்டிங் செய்ய வந்தார்.

கையில் காயம் ஏற்பட்டபோதிலும், வலியைத் தாங்கிக்கொண்டு ரோஹித் சர்மா 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். ஆனாலும், இந்திய அணிக்கு கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் பந்தில் ரோகித் சர்மா சிக்சர் எடுத்தார். அடுத்த பந்தில் அவரால் ரன் அடிக்க முடியாமல் போனது. இதனையடுத்து, 2 ஒரு நாள் போட்டிகளையும் வங்காளதேச அணி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

cricket-indian-team-rohit-sharma-achievement

ரோகித் ஷர்மா சாதனை

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 256 சிக்சர்களும், டி20 தொடரில் 182 சிக்சர்களும், டெஸ்ட் தொடரில் 64 சிக்சர்களும் ரோகித் சர்மா விளாசி இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் (553) அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்தியத் தீவின் கிறிஸ் கெயில் முதலிடத்தை பிடித்துள்ளார். அதற்கு அடுத்து 2ம் இடத்தில் ரோகித் சர்மா இருக்கிறார்.