முதல் 20 ஓவர் போட்டி.. மொகாலியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

Indian Cricket Team Australia Cricket Team
By Nandhini Sep 20, 2022 07:35 AM GMT
Report

மொகாலியில் இன்று இரவு முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

20 ஓவர் போட்டி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளன. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாட உள்ளன. இத்தொடர் 6 நாட்கள் மட்டும் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 20, 23, 25ம் தேதியோடு நிறைவடையும்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல் 

இதனையடுத்து, இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று இரவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், இரு அணியும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆசிய கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா விளையாடும் முதல் போட்டி இதுவாகும். இதனையடுத்து அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில், தங்களை தயார்படுத்திக் கொள்ள இத்தொடர் இந்திய அணிக்கு உதவிகரமாக இருக்கும்.     

cricket-indian-team-australia-team