டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 பார்மெட்டில் சதம் வீசி மாபெரும் சாதனைப் படைத்த சுப்மன் கில்....!

Cricket Viral Video Indian Cricket Team Shubman Gill
By Nandhini Feb 02, 2023 07:17 AM GMT
Report

டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 பார்மெட்டில் சதம் விளாசி 5-வது இந்திய வீரராக சாதனைப் படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, இப்போட்டியில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன் பின்பு, சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களத்தில் இறங்கினர்.

இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவித்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் 5-வது அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

இதனையடுத்து, 235 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே திணறி நிலைகுலைந்தனர்.

இப்போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் வெறும் 66 ரன்னில் சுருண்டு விழுந்தது. இதனால், இந்தியா அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

cricket-indian-shubman-gill-unstoppable

சாதனைப் படைத்த சுப்மன் கில்

நேற்று நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இதனால், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்கிற 3 பார்மெட் கிரிக்கெட் போட்டியிலும் சதம் விளாசிய 5வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

இதேபோல சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த 7வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கில் பெற்றிருக்கிறார். ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோருடன் அவர் இப்பட்டியலில் இணைந்திருக்கிறார்.