I am came back... - ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் களத்திற்கு திரும்புகிறார் ரெய்னா... - துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!
ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் கிரிக்கெட் உலகத்திற்கு திரும்பி வந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ரெய்னா. வெளியான செய்தியால் அவரது ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுரேஷ் ரெய்னா
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னாவை ரசிகர்கள் சின்ன தல என்று அன்போடு அழைக்கின்றனர். சுரேஷ் ரெய்னா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
சுரேஷ் ரெய்னா பழைய பார்மில் இல்லை என்று கூறி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில் அக்டிவ்வாக இருந்து வருகிறார் சுரேஷ் ரெய்னா, அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவுகளை வெளியிட்டு வருவதால், அவருடைய ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுக்கிறது.
களத்திற்கு திரும்புகிறார் ரெய்னா
இந்நிலையில், தன் ஆட்டத்தால் ரசிகர்களை மகிழ்வித்த சுரேஷ் ரெய்னா மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார்.
இந்த மாதம் தொடங்க உள்ள அபுதாபி டி10 கிரிக்கெட் லீக்கில் நடப்பு சாம்பியனான டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா விளையாட உள்ளார். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் அபுதாபியில் வரும் நவம்பர் மாதம் 23ம் தேதி அன்று தொடங்க உள்ளது. இறுதி போட்டி டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது.
World Cup winner @ImRaina has signed for the @TeamDGladiators ???
— T10 League (@T10League) November 1, 2022
One of India's all time finest white-ball players, Raina will line up in the #AbuDhabiT10 for the first time and we can't wait ?#InAbuDhabi #CricketsFastestFormat pic.twitter.com/7FGP5TWk89