பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி - பட்டாசு வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தின் போது பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கடைசி ஓவரில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
இதனையடுத்து, நேற்று 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களம இறங்கிய பாகிஸ்தான்அணி 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது.
பினனர் களம் இறங்கிய இந்திய 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 148 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதையடுத்து, மும்பை, ஐதராபாத், நாக்பூர் உட்பட பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
#PKMKBForever And Its Proved Again ...
— Aditya Raj (@AdityaRajLal) August 28, 2022
BAAP BAAP HOTA HAI ...
Congratulations to Team India on the Huge Victory
To pakistani fans: Cricket is game not war enjoy its as game!! pic.twitter.com/W210X5Aydf
This is #Jammu right now after #India's Victory over #Pakistan ???
— THE BONE DOCTOR OF J&K Dr Vikas Padha?? (@DrVikasPadha) August 28, 2022
????????#AmazingJammu ??❤️ pic.twitter.com/qDPEVNGIL6