கேட்ச்சை தவறவிட்ட ராகுல்... - மைதானத்தில் பயங்கர கோபத்தை வெளிப்படுத்திய ரோகித்...! - வைரலாகும் வீடியோ
கேட்ச்சை தவறவிட்ட ராகுலை பார்த்து, மைதானத்தில் ரோகித் சர்மா பயங்கர கோபத்தை வெளிப்படுத்திய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவை வீழ்த்திய வங்காளதேசம்
இந்தியா - வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்துப் போட்டியின் பேட்டிங் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது.
இதன்பிறகு, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. இப்போட்டியின் முடிவில், 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து, இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபாரமாக வெற்றி பெற்றது.
கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச்
இப்போட்டியில், கே.எல். ராகுல் தவறவிட்ட கேட்ச்தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மிஹிடி ஹசன் மிர்சா அதிரடியாக ஆடினார். அவர் ரன் அடிக்க, அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு குறைந்து கொண்டே வந்தது.
ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார். அது கேட்ச் நோக்கி சென்றது. அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் வேகமாக ஓடினார். அவர் அந்த பந்தை கேட்சி பிடிக்க முயன்றபோது, பந்து அவரது கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
கேட்சி தவறவிட்டதை தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹசன் மிர்சா வங்காளதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச்சை இந்திய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
ரோகித் சர்மா கோபம்
இந்நிலையில், ராகுல் கேட்ச்சை தவறவிட்ட பின் மைதானத்தில் கேப்டன் ரோகித் சர்மா கடுமையாக கோபமடைந்தார். தற்போது, ரோகித் சர்மா கோபமடைந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
KL Rahul missed the catch & he did big mistake of catch droped to loose this match.
— Deepak Reddy (@DeepakR21576732) December 5, 2022
No words comes to see the match.#KLRahul? #INDvsBangladesh pic.twitter.com/8diHOhKP4I
Confidence, Courage & Leadership is missing in Rohit Sharma Captaincy & Either it is Cool & Calm behavior in field or selection of Team.
— Pankaj Kumar Gupta (@LotusIncredible) December 4, 2022
Dravid MENTORSHIP is completely useless in era of Aggressive Cricket
KL Rahul is biggest fraud take rest against SENA Countries #INDvsBAN pic.twitter.com/grXWTR9Fh8
This is KL Rahul we know!!! pic.twitter.com/Dt8rmAkXsc
— Zayn ?? (@pant_peak) December 4, 2022