வாவ்... மாஸா போஸ் கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்...குஷியான ரசிகர்கள்... - வைரல் புகைப்படம்
இணையதளத்தில் மாஸாக போஸ் கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி
டி-20 உலக கோப்பையில் பங்கேற்க செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல். சூர்ய குமார் யாதவ் உட்பட பேட்ஸ்மன்களும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் போன்ற பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா பயணம்
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
வரும் 13ம் தேதி வரை, பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது. முன்னணி வேகப்பந்து வீச்சாலர் பும்ரா காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். இவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வைரலாகும் மாஸ் புகைப்படம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் மாஸாக போஸ் கொடுத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் மாஸ்... வெறித்தனம்.. வெறித்தனம்.. என்று மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Rohit Sharma and Team India players Spotted pic.twitter.com/0fluONhwjJ
— Rohitian Abhi (@imAb_45) October 10, 2022