20 ஓவர் உலக கோப்பை - ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு

Cricket Indian Cricket Team T20 World Cup 2022
By Nandhini Sep 13, 2022 05:05 AM GMT
Report

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

7-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் கலந்து கொள்ளப்போகும் இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

cricket-indian-cricket-team-rohit-sharma

இந்திய அணி வீரர்களின் பெயர் வருமாறு -

ரோகித் ஷர்மா (கேப்டன்),

கேஎல் ராகுல் (துணை கேப்டன்),

விராட் கோலி,

சூர்யகுமார் யாதவ்,

தீபக் ஹூடா,

அக்சர் படேல்,

ஜஸ்பிரித் பும்ரா,

புவனேஸ்வர் குமார்,

ஹர்ஷல் படேல்,

அர்ஷ்தீப் சிங்

ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),

தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்),

ஹர்திக் பாண்டியா,

ரவிச்சந்திரன் அஷ்வின்,

சாஹல்,

ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பி இருக்கிறார். இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெற்றிருக்கின்றனர்.