இந்திய அணி பேட்டிங் வரிசை மிகச் சிறப்பு... ஆனால் பீல்டிங் தான்... - ரவி சாஸ்திரி கவலை

Cricket Indian Cricket Team
By Nandhini Oct 14, 2022 10:35 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங்கை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கவலை தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

ஆஸ்திரேலியா பயணம்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணி மும்மையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. நேற்றோடு பெர்த் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி நிறைவடைந்தது.

பும்ரா விலகல்

பும்ராவிற்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் அணியின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

cricket-indian-cricket-team-ravi-shastri

ரவி சாஸ்திரி கவலை

இந்நிலையில், இந்தியாவின் பீல்டிங் மோசமாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் -

இந்த அணியுடன் கடந்த 6 -7 வருடங்களாக நான் இருந்துள்ளேன். முதலில் பயிற்சியாளராக இருந்த நான் தற்போது வெளியிலிருந்து பார்க்கும்போது டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே தற்போதுள்ள பேட்டிங் வரிசை மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால், பீல்டிங் துறையில்தான் இந்திய வீரர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன் பீல்டிங் துறையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இலங்கை பீல்டிங் துறையில் சிறப்பாக செயல்பட்டதால்தான் அவர்களால், பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வெற்றி அடைந்தனர் என்று தெரிவித்தார்.