இந்திய வீரர்களை திடீரென நேரில் சந்தித்த எம்.எஸ்.தோனி - வைரலாகும் வீடியோ...!
இந்திய வீரர்களை நேரில் சந்தித்து பேசிய இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - நியூசிலாந்து இன்று நேருக்கு நேர் மோதல்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெற உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் ஆடிய கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருக்கு பணிச்சுமை காரணமாக இத்தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அணியில் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா என்று பெரிய பட்டாளமே உள்ளதால் இந்திய அணி வலுவாக இத்தொடரை வெல்லும் என்று நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். பந்து வீச்சில் அர்தீப்சிங், சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணி வீரர்களை சந்தித்த எம்.எஸ். தோனி
இந்நிலையில், ராஞ்சியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்திய இளம் வீரர்களை அவர் ஊக்குவித்தார்.
தற்போது, இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Ms Dhoni visited India team training in Ranchi ahead of 1st T20i against New Zealand. #INDvNZpic.twitter.com/qZ2fsbvLfU
— Resanth. (@Cric_Resanth) January 26, 2023
MS Dhoni visited the Indian dressing room today ahead of the first T20I against New Zealand in Ranchi ???#IndianCricketTeam #TeamIndia #INDvNZ #Cricket #MSDhoni pic.twitter.com/v1ivfKNMzH
— CricTelegraph (@CricTelegraph) January 26, 2023