டி20 உலகக் கோப்பை போட்டியில் என்னை தேர்வு செய்யாதது ஏமாற்றத்தை தரவில்லை - குல்தீப் யாதவ்
டி20 உலகக் கோப்பை போட்டியில் என்னை தேர்வு செய்யாதது ஏமாற்றத்தை தரவில்லை என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டி
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடி வந்தது.
நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரு அணிகளும் தலா ஒன்றில் வென்று சமநிலையில் இருந்ததால், தொடரை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும், ஆர்வமுடனும் இருந்தனர்.
நேற்று டெல்லியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்தது. இப்போட்டியில் இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
குல்தீப் யாதவ் பேட்டி
இது குறித்து குல்தீப் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியானது. என் தன்னம்பிக்கையை இப்போட்டி அதிகமாக்கியுள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணி சிறந்த ஒன்றாகும். எனது செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, வரவிருக்கும் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படுவேன் என்றார்.