இலங்கைக்கு எதிரான டி20 தொடர் - கே.எல். ராகுலை நீக்க வாய்ப்பு..? ரசிகர்கள் ஷாக்
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலை நீக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.எல். ராகுலை ட்ரோல் செய்த ரசிகர்கள்
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இதனையடுத்து, வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணித் தலைவர் கே.எல்.ராகுல் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடவில்லை. இதனையடுத்து, அவரை கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்து கிண்டல் செய்து வருகின்றனர்.
கே.எல்.ராகுல் நீக்கம்..?
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கைக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இதனையடுத்து, இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஜனவரி 3-ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை ஓரிரு நாட்களில் சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வு கமிட்டி தேர்வு செய்ய இருக்கிறது. இந்த 20 ஓவர் தொடருக்கான அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.