வேற லெவல்... குத்தாட்டம் போட்டு வெற்றியை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள் - வைரலாகும் வீடியோ

Viral Video Indian Cricket Team
By Nandhini Oct 12, 2022 05:58 AM GMT
Report

குத்தாட்டம் போட்டு வெற்றியை கொண்டாடிய இந்திய அணி வீரர்களின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணி

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடி வந்தது.

நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரு அணிகளும் தலா ஒன்றில் வென்று சமநிலையில் இருந்ததால், தொடரை வெல்லப்போவது யார் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும், ஆர்வமுடனும் இருந்தனர்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்தது. இப்போட்டியில் இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

cricket-indian-cricket-team-dance

குத்தாட்டம் போட்ட இந்திய வீரர்கள்

இந்நிலையில், குத்தாட்டம் போட்டு வெற்றியை கொண்டாடிய இந்திய அணி வீரர்களின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து, வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.