20 ஓவர் கிரிக்கெட் தொடர் - டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி - வைரலாகும் வீடியோ

Cricket Viral Video Indian Cricket Team Australia Cricket Team
By Nandhini 1 வாரம் முன்

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்திய - ஆஸ்திரேலியா 20 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டியை காண டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்.

20 ஓவர் தொடர்

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளன. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாட உள்ளன. இத்தொடர் 6 நாட்கள் மட்டும் நடைபெற உள்ளது.

இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா

இதனையடுத்து, கடந்த 20ம் தேதி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது.

இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் 22 ரன்களில் வெளியேறினார். கேமரான் கிரீன் – ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றி  பெற்றது. 3 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் இருக்கிறது.

போலீசார் தடியடி

இந்நிலையில், இத்தொடரின் போட்டி வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. ஐதராபாத், செகந்திராபாத்தில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியை காண டிக்கெட் வாங்க ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த, குவிந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.